திடீர் டுவிஸ்ட்..! செங்கோட்டையன் திமுகவிற்கு தான் வருவார்… ஒரே போடாக போட்ட அன்வர் ராஜா…!!

By Soundarya on கார்த்திகை 26, 2025

Spread the love
MLA பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.  ஒருதரப்பினர் தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் என்றும் ஒருசிலரோ திமுகவில் இணைவாரா என்றும் பேசப்படுகிறது . அரசியல் வட்டாரத்தில் இந்த பேச்சுக்கள் தான் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில்  பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனின் உழைப்பு திராவிட இயக்கத்திற்கு பயன்பட்டால் நல்லது என்று அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், “என்னுடைய சாய்ஸ் என்னவென்றால், செங்கோட்டையன் திமுகவிற்கு வருவார் என்று நம்புகிறேன். அவரது உழைப்பு திராவிட இயக்கத்திற்கு பயன்படும்” என்று தெரிவித்தார்.