காலையிலேயே ஷாக்… புதிய அதிமுக அணியை உருவாக்கும் செங்கோட்டையன்… பரபரப்பை கிளப்பிய பிரபலம்…!

By Nanthini on புரட்டாதி 9, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுகவில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து அதிரடியாக விலகி வருகிறார்கள். சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் இபிஎஸ் தலைமைக்கு எதிராக போர் கொடி தூக்கிய செங்கோட்டையன் திடீர் திருப்பமாக டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாஜக எங்கெல்லாம் உறவு வைக்கிறார்களோ அங்கெல்லாம் கூறு போடுவது தான் வழக்கம் என்று செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவை நான்காக வைத்து இருக்கிறார்கள். இப்போது ஐந்தாவது அதிமுகவாக செங்கோட்டையன் தலைமையில் உருவாகலாம் என்று கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சை புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.