ஓபிஎஸ், டி.டி.வி-ஐ சந்தித்ததன் எதிரொலியாக, அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த செங்கோட்டையன், ஜெ., மறைவுக்கு பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா தன்னிடம் பேசினார்.. ஆனால், அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இபிஎஸ் பெயரை பரிந்துரை செய்தேன் . 2 முறை முதல்வர் வாய்ப்பு கிடைத்தும் அதிமுக உடைந்துவிடக்கூடாது என விட்டுக்கொடுத்தேன்.
திமுகவின் ‘B’ டீமாக நான் இல்லை, கோடநாடு வழக்கில் இபிஎஸ் தான் A1 ஆக இருக்கிறார். கட்சியில் நீண்ட காலமாக இருந்த என்னை ஒரு நோட்டீஸ் கூட கொடுக்காமல் நீக்கம் செய்திருப்பது வேதனையாக் இருக்கிறது. இபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு, அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வி அடைவதால் கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என குரல் கொடுத்ததாக கூறினார்.
