அவங்கள விட நீ என்ன பெரிய ஆளா… எவனும் இங்க கிடையாது… இபிஎஸ்- ஐ வம்புக்கு இழுத்த செங்கோட்டையன்.. !

Spread the love

தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரப் போகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். தற்போது அதிமுக வில் எடப்பாடி பழனிச்சாமி,  செங்கோட் டையனுக்கு  இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்போது கோவை மற்றும் கொங்கு மண்டலத்தில் நடந்த நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லையாம். இந்தச் சம்பவம் மேலும் மோதலை அதிகப்படுத்தி உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அவருடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். என் மேசைமீது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் உள்ளன. புரட்சித்தலைவர் நாடே போற்றிய அளவிற்கு செல்வாக்கை கொண்டவர். பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட ஒரே தலைவர் அவர் தான். நம்முடன் அவர் இல்லை என்றாலும் இன்றுவரை மக்கள் மனதில் இருப்பவர் புரட்சித்தலைவர்.

புரட்சித் தலைவர் அவர்கள் 1973 நடந்த திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் 2 லட்சத்து 37 ஆயிரத்து வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடினார். இந்தியாவிலேயே இதுவரை இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் எவருமே வெற்றி பெறவில்லை. 1975இல் பொதுக்குழு கோவையில் நடைபெற்றது. அப்போது அரங்கநாயகம் தலைவர் திருப்பூர் மணிமாறன், என்னை பொருளாளராக நியமித்து பொதுக்குழு நடத்த வேண்டும் என்று புரட்சித்தலைவர் சார்பாக ஆணையிட்டார். பிறகு 1977-ல் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிடச் சென்றபோது புரட்சித்தலைவர் அவர்கள் சத்தியமங்கலத்தில் என்னை நிக்க சொன்னார். சத்தியமங்கலம் என்பது எனக்கு புதிய தொகுதி நான் என்ன பண்ணுவேன் என்று கேட்டபோது என் பெயரை உச்சரி, நீ வெற்றி பெறுவாய் என்று கூறினார். புரட்சித் தலைவர் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர், மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்துள்ளார்.

அவர் மறைந்த பிறகு 2016 இல் அம்மா அவர்கள் வெற்றிவாகை சூடினார். பிறகு அம்மாவும் ஓராண்டு காலத்தில் மறைந்த பிறகு கட்சியில் நிறைய சோதனைகள் வந்தது. பொதுச் செயலாளராக திருமதி சசிகலா அவர்களை ஒருமனதாக நாங்கள் நியமித்தோம். பிறகு முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஓபிஎஸ் முன்மொழிந்தார். ஆனால் இன்றுவரை அதிமுகவில் பல சோதனைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. எவ்வளவுதான் தடுமாற்றங்கள் வந்தாலும் இந்த இயக்கத்தில் நான் பல்வேறு பணிகளை செய்து உள்ளேன். புரட்சித் தலைவர் மற்றும் அம்மா அவர்கள் இருவரும் என்னை ஆடியோ மூலமாக பாராட்டியது அனைவருக்கும் தெரியும். இதை எதற்கு இங்கே சொல்கிறேன் என்றால் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி போன்ற தலைவர்கள் இதுவரை யாருமே இல்லை என தெரிவித்தார்.

Divyamayakannan

Recent Posts

அடே… தப்பு பண்ணா தப்பிக்க முடியாது… முகமூடி நபரின் வெறித்தனமான கத்திக்குத்து… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

மும்பை காந்திவலி கிழக்கு லோகந்த்வாலா வளாகத்தில் விகாஸ் குட்டே என்ற இளைஞர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபரால்…

1 minute ago

“அண்ணே… 16 வருசமா உன்னை எங்கெங்கோ தேடுனேன்…” ராக்கி கட்டச் சென்ற தங்கைக்கு… சாலையோரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…

22 minutes ago

2029-ல் விஜய்க்கு பிரதமர் நாற்காலியா?…. உண்மையைப் போட்டு உடைத்த காங்கிரஸ் எம்பி… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.…

23 minutes ago

ஐயோ பாவம்… அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்ட வந்த தங்கச்சி… கார் மோதி பரிதாப பலி… ரக்ஷா பந்தன் இரவில் நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக லலித்பூரிலிருந்து குஷிபுராவில் உள்ள தனது தாய்வழி வீட்டிற்கு 24 வயதான பாலக் வந்துசேர்ந்தார். திங்கட்கிழமை…

25 minutes ago

‘அப்பாவைக் காணோம்’…. சட்டமன்ற பதிலடிக்கு சேலத்தில் வைத்து விஜய்க்கு விடுக்கப்பட்ட ‘ரீல்ஸ்’ சவால்… விஜய்யை கலாய்க்க போய் திமுக சிக்கிய ஆப்பு….!

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் விஜய்யின் தவெக வருகையும் அவர் எழுப்பும் கேள்விகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.…

28 minutes ago

“நிதி உதவி தர்றோம்”…. முதல்வர் விஜய் பெயரில் பரவும் வாட்ஸ்அப் மெசேஜ்… நம்பினால் பேராபத்து…. தமிழக மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை….!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசுவது போல ஏஐ (AI) மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்…

34 minutes ago