3 EX அமைச்சர்கள்… இபிஎஸ்-க்கு ஷாக் கொடுக்க போகும் செங்கோட்டையன்… காலையிலேயே பரபரப்பு…!

By Nanthini on மார்கழி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவருடன் முன்னாள் எம்எல்ஏ இருவரும் சேர உள்ளதாக தெரிகிறது. விஜய் முன்னிலையில் அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து திமுக, அதிமுக மற்றும் மதிமுகவில் அரசியல் பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் விஜய் கட்சியில் இணைந்தார். அவருக்கு பிரச்சார செயலர் பதவி வழங்கப்பட்டது.

   

இதனை தொடர்ந்து செங்கோட்டையன் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் விஜய் வரும்போது சில அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியிருந்தார். அதன்படி கொங்கு மண்டலத்தில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர் என மூவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இபிஎஸுக்கு அதிர்ச்சி தருவதாக இருக்கும் என்றும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்