தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் இபிஎஸ் மீது கட்சி நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். அதன்படி ஈபிஎஸ்-க்கு எதிராக குரல் கொடுத்த செங்கோட்டையனை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கினார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கினால் என்ன பாஜக பார்த்துக்கும் என்ற நம்பிய செங்கோட்டையனை பாஜக கைவிட்டது தான் பாக்கி என்ற பேச்சுகள் வலுத்தன. இதனால் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் தனது காரை செங்கோட்டையன் திருப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் கட்சியும் அரசியல் முதிர்ச்சி பெற்ற ஆட்கள் தேவை என்பதால் சேர்த்துக் கொள்வார்கள் என்று செங்கோட்டையன் நம்பி இருந்தாராம். ஆனால் பாஜகவுடன் செங்கோட்டையன் நெருக்கம் காட்டுவதால் விஜய் தயங்குகிறார் என்று பேசப்படுகிறது.
