அதிமுகவுக்கு எதிராக பிரம்மாண்ட கூட்டணி… செங்கோட்டையன் போட்ட மாஸ்டர் பிளான்… மொத்தமாக சரியும் இபிஎஸ்ஸின் கோட்டை…!

By Nanthini on கார்த்திகை 26, 2025

Spread the love

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை தலை தூக்கி உள்ளது. தனக்கு எதிராக குரல் கொடுக்கும் முக்கிய நிர்வாகிகளை இபிஎஸ் அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கிவரும் நிலையில் இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் வாக்குகள் அனைத்தும் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனிடையே இன்று விஜயை நேரில் சந்தித்து பேசிய செங்கோட்டையன் நாளை அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஐ கடுமையாக எதிர்த்து வரும் செங்கோட்டையன் வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு சரிவை ஏற்படுத்தும் வகையில் விஜய் தலைமையில் பிரம்மாண்ட கூட்டணியை அமைக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.