தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன.
அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசி இருந்தார். அதேசமயம் செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ்ஐ சந்திக்க இருந்த செங்கோட்டையன் கடைசி நேரத்தில் தன் முடிவை மாற்றியதாக கூறப்படுகிறது. தலைமைக்கு கெடு விதித்த விவகாரத்தில் ஏற்கனவே அமைப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன. இப்படியான நிலையில் அவர் டிடிவி, சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்தால் கட்சியிலிருந்து நீக்க இபிஎஸ் திட்டமிட்டதாக தெரிகிறது. அதை தவிர்க்கவே அவர் டிடிவி தினகரனை நேரில் சந்திக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…
ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…
வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…