2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கோபிச்செட்டிப்பாளையத்தில் தவெக (TVK) தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நடிகர் விஜய்யின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகி, சுமார் ரூ. 5,000 கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். அந்த முயற்சியை நான் முறியடித்ததால் என் மீது எடப்பாடி கொலைவெறியில் உள்ளார் என்று செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவியையும், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியையும் விட்டுக் கொடுத்ததே நான் தான். எனக்குப் பின் கட்சிக்கு வந்து பதவிகளை அனுபவித்துவிட்டு, உழைத்தவர்களையே இப்போது அவர் நீக்கி வருகிறார்.எனது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யச் சொல்லும் அளவுக்கு அவர் இறங்கிச் சென்றிருப்பது, அவரது தோல்வி பயத்தைக் காட்டுகிறது.எடப்பாடி பழனிசாமி கட்சியை ஒரு கம்பெனி போல நடத்தப் பார்க்கிறார். அவரின் மகனும், மச்சானும் பதவிக்கு வரத் துடிக்கிறார்கள், இது மக்கள் நலனுக்கான இயக்கம் அல்ல, ஒரு குடும்ப கம்பெனி என்று கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு, திமுகவை வீழ்த்த விஜய் ஒருவரால் மட்டுமே முடியும், 10 முறை தோல்வியைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியால் அது முடியாது
