திடீர் திருப்பம்…. “தவெகவுடன் பாமக கூட்டணி”…. செங்கோட்டையன் பரபரப்பு அறிவிப்பு… தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

By Nanthini on பங்குனி 1, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதை உறுதிப்படுத்தினார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும், அமையவுள்ள இந்தக் கூட்டணி தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும் வகையில் அமையும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய செங்கோட்டையன், தற்போதைய அரசியல் சூழலில் திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே என்று சூளுரைத்தார். இன்னும் பல கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் இணைய உள்ளதால் தொண்டர்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை என்றும், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மற்ற கட்சிகள் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து கூட்டங்களைக் கூட்டும் நிலையில், எந்தவிதச் செலவுமின்றி தவெக-விற்குத் தானாகவே மக்கள் கூட்டம் அலைமோதுவது கட்சியின் வளர்ச்சியைப் பறைசாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

   

அரசியல் களத்தில் தவெக-விற்கு முட்டுக்கட்டை போடப்படுவதாகக் குற்றம் சாட்டிய செங்கோட்டையன், கட்சிக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் கூறினார். குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் பேருந்து நடத்துநர்கள் விசில் பயன்படுத்துவதற்கு அரசுத் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், தவெக கூட்டங்களுக்கு மட்டும் பல்வேறு விதிகள் விதிக்கப்படுவதாக ஆதங்கம் தெரிவித்தார். இத்தகைய தடைகளைத் தாண்டி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராகி வருவதாக அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.