“அதிமுகவின் எதிர்காலம் அவ்ளோதானா?”…. போட்டுடைத்த செங்கோட்டையன்… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றிய தவெக-வின் அடுத்த ஸ்கெட்ச்….!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய ஆட்சியை அமைத்துள்ள நிலையில், அதுவரை ஆளுங்கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. தமிழகத்தை நீண்டகாலம் ஆட்சி செய்த அதிமுக, வரலாறுகாணாத வகையில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அதிமுகவின் பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். இன்றுகூட அதிமுகவின் 3 முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்துள்ள செய்தி அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான அரசியல் சூழ்நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெகவின் தற்போதைய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் எதிர்காலம் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா ஆகியோரின் காலம் வேறு; இன்றைய அரசியல் சூழல் முற்றிலும் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் அதிமுகவின் எதிர்காலம் என்பது முற்றிலும் கேள்விக்குறியாகவே இருக்கிறது” என்று ஓப்பீட்டாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் தவெகவின் தற்போதைய ஆட்சி மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விரிவாகப் பேசினார். “தென்மேற்குப் பருவமழையால் தமிழகத்தில் நிலச்சரிவுகளோ பெரிய சேதங்களோ ஏற்பட வாய்ப்பில்லை. கேரளாவில் நிகழ்ந்தது போன்ற அசம்பாவிதங்கள் இங்கு நடந்துவிடக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். அதனடிப்படையில் நீலகிரி, கோவை பகுதிகளில் 24 மணி நேரக் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மக்கள் தேடி வந்து கேட்காத அளவுக்கு உடனுக்குடன் நிவாரணப் பணிகளை ஆற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் ஆணை” என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்குத் தூய்மையான நல்லாட்சியைத் தருவதற்காக முதலமைச்சர் நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவித்து வருவதாகவும், இதைப் பார்த்துவிட்டுத்தான் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணைந்து வருவதாகவும் செங்கோட்டையன் பெருமிதத்துடன் கூறினார். இறுதியாகப் பேசிய அவர், “இன்றைய தேதியில் நல்லாட்சி நடத்தக்கூடிய சிறந்த தலைவராக விளங்கும் தளபதி விஜய் தமிழ்நாட்டில் இருக்கும் வரை அவரே முதலமைச்சராக நீடிப்பார்; அவரது பின்னால் அணிவகுக்கும் மக்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

2 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

2 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

2 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

2 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

3 மணத்தியாலங்கள் ago