தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏன்..? “திமுக செய்த அந்த ₹627 கோடி தப்புதான் காரணம்.. புட்டு புட்டு வைத்த அமைச்சர் செங்கோட்டையன்…!!

By Soundarya on ஆனி 13, 2026

Spread the love

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுப் பிரச்சனை மற்றும் அதற்கு எதிராக அதிமுக அறிவித்துள்ள போராட்டம் குறித்து, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விரிவான விளக்கம் அளித்துள்ளார். தற்போது நிலவி வரும் கடுமையான வெயில் காரணமாக, மாநிலம் முழுவதும் மின்சாரத்திற்கான தேவை வழக்கத்தை விட பெருமளவில் அதிகரித்துள்ளதே தற்போதைய மின் தட்டுப்பாட்டிற்கு முதன்மைக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலத்திலும் கூட இதுபோன்ற மின்வெட்டுப் பிரச்சனைகள் இருந்தன என்பதை அவர் தனது விளக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

தற்போதைய மின் பற்றாக்குறைச் சூழலுக்கு முந்தைய திமுக அரசின் தவறான திட்டமிடலே காரணம் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒட்டுமொத்த மின் பகிர்மானக் கட்டுமானங்களை மேம்படுத்துவதற்காக வெறும் ₹627 கோடி மட்டுமே செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்தப் போதாத நிதியொதுக்கீடும், தொலைநோக்குப் பார்வையற்ற செயல்பாடுகளுமே தற்போதைய உள்கட்டமைப்பு பலவீனத்திற்கு மிக முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

   

அதிமுகவின் போராட்ட அறிவிப்புகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள அவர், அரசு தரப்பில் மின் விநியோகத்தைச் சீரமைக்கத் தேவையான அனைத்து அதிரடி நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காகக் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதை விடுத்து, மின் தேவையை ஈடுகட்ட அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.