புதிய திருப்பம்..! முக்கிய புள்ளியுடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு… பரபரப்பில் அரசியல்…!!

By Soundarya on மார்கழி 2, 2025

Spread the love

சமீபத்தில்  அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடைய விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் செங்கோட்டையனை வைத்தே இன்னும் சில அதிமுக சீனியர்களுக்கு தவெக வலைவீசி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் முன்னதாக பல முன்னாள் அமைச்சர்களும், அனுபவமுள்ள தலைவர்களும் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்த நிலையில் தான்  OPS ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தையை நடத்தினாராம். அதற்கு அவர் டிச.15-ல் ஓபிஎஸ் முக்கிய முடிவை எடுக்கவிருப்பதால், அதுவரை பொறுத்திருங்கள் என்று செங்கோட்டையனிடம்  பதிலளித்துள்ளாராம்.