அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இறந்ததிலிருந்து கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டை வலியுறுத்தி இருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் செங்கோட்டையன் பதவிகள் பறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமைக்கு எதிரான அவர்களுடன் தொடர்பில் இருந்த தாக ஒரு மாதத்திற்கு முன்பு கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
அதன் பிறகு செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பாராத நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிகள் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார். அதிமுக மற்றும் திமுகவின் உடைய கூட்டணிகள் ஓரளவுக்கு உறுதியான நிலையில் தமிழக வெற்றிக்கழகம் உடனான கூட்டணி மட்டும் இன்னும் உறுதியாக வில்லை. விஜய் கட்சி ஆரம்பித்தது முதல் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்று பேச்சுக்கள் அடிபட்டது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் தலைவர்களும் நடந்து கொண்டனர். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முக்கிய தலைவராக அங்கம் வகித்து வரும் செங்கோட்டையன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசை ஒரு சுப நிகழ்ச்சியில் சந்தித்து பேசியுள்ளார். இது ஒரு எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சந்திப்பு எனவும் அரசியல் ரீதியானது கிடையாது என்று திருநாவுக்கரசை விளக்கமளித்தார். இருந்தாலும் இந்த சந்திப்பு கூட்டணி குறித்த அட்சரமாகவே இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கு விஜய் மற்றும் ராகுல் காந்தியின் நட்புறவும், காங்கிரஸ் திமுக கூட்டணியிடம் சில நிபந்தனைகளை முன் வைப்பதும் உதாரணமாகவே பார்க்கப்படுகின்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…