தமிழகத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள விஜய் தயாராகி வருகின்றார். கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சி பல சவால்களை சந்தித்தாலும் தற்போது மீண்டும் தனது கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது தமிழகத்தில் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. இதனிடையே தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாட்டிலேயே அரசியல் எதிரி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் விஜய் அறிவித்திருந்தார். எதிரியாக திமுக இருக்கும் பட்சத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகள் சில தமிழக வெற்றி கழகம் கட்சியையும் விஜயையும் விமர்சிப்பதை விட்டுவிட்டு அவருக்கு ஆதரவாகவும் அவர் அரசியலில் வெற்றி பெற அறிவுரைகளையும் வழங்கி வருகின்றன.
அதிலும் முக்கியமாக திமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு விஜய் வருகைக்கு பிறகு மாறி இருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்த போது விஜய் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இது திமுகவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், விஜய் வெறுப்பு அரசியலை உயர்த்தி பிடிக்கின்றார்.
தமிழக வெற்றி கழகம் முன்வைக்கும் அரசியல் கொள்கை சார்ந்த அரசியலாக இல்லாமல் ஆளும் கட்சி மீதான வெறுப்பை உமிழும் அரசியலாக இருக்கிறது . விஜயின் அரசியல் வருகையை முதன்முதலில் வரவேற்றது எங்கள் கட்சிதான் என்றும் கூறியுள்ளார். திமுகவை கடுமையாக எதிர்க்கும் விஜயை ஆதரித்தோம் என்று கூறும் இவருடைய கருத்து திமுகவுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே திருமாவளவன் திமுகவுக்கு எதிராக பல விஷயங்களில் குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…