அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் சற்றுமுன் பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜயின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். நாளை தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அவர் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இன்று விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். காலையில் செங்கோட்டையன் தனது அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகு திமுக தரப்பிலும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அவர் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைய உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் அன்றாட பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க கட்சியின் தலைவர் விஜய் ஏற்கனவே நிர்வாக குழுவை அமைத்திருந்தார். இந்தக் குழுவை நிர்வாகிக்கும் வகையில் புதிய பொறுப்பை விஜய் உருவாக்க இருப்பதாகவும் அந்த பொறுப்பு செங்கோட்டையனுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
