செங்கோட்டையன் சிக்கினார்.. பெரும் பரபரப்பு… முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக விடுத்துள்ள பகிரங்க சவால்…!

By Nanthini on ஆனி 22, 2026

Spread the love

அதிமுக ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே. செல்வராஜ் விடுத்துள்ள கண்டன அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஒன்பது பேர், கடந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் த.வெ.க விஜய்-க்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் நேரடி தலையீட்டால் பழிவாங்கும் நோக்குடன் திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அமைச்சர் கே.ஏ.எஸ்-ஸின் உதவியாளர் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும், தற்போதைய அரசு நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் மலிந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். “அரசியல் தலையீடு இல்லாத நேர்மையான அரசு” என்று மேடைகளில் பேசி வரும் முதலமைச்சர் விஜய், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அமைச்சரின் தன்னிச்சையான போக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஏ.கே. செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.