BREAKING: செங்கோட்டையன் முடிவை மாற்றினார்… செம ஷாக்கில் விஜய்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on மாசி 27, 2026

Spread the love

வேலூர் பிரசாரக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டு பரபரப்பைக் கிளப்பிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தற்போது மீண்டும் ஜெயலலிதாவின் படத்திற்கு மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கோபியில் நடைபெற்ற மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், அவர் பழையபடி அதிமுக அடையாளத்துடன் தோன்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் (SM) தீயாய் பரவி வருகின்றன. அதிமுகவுக்கு அவர் தாவப்போகிறார் என்ற வதந்திகள் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், இந்தத் திடீர் மாற்றம் அவரது ஆதரவாளர்களையே திகைக்க வைத்துள்ளது.

செங்கோட்டையனின் இந்தத் தொடர் மாற்றங்கள், அவர் அதிமுக மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருக்கிறாரா அல்லது விஜய்யின் செல்வாக்கை சோதித்துப் பார்க்கிறாரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும், ஒரே வாரத்தில் இரண்டு வெவ்வேறு பிம்பங்களுடன் காட்சியளிப்பது அவரது அரசியல் நிலைப்பாட்டில் உள்ள உறுதியற்ற தன்மையைக் காட்டுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.