“அதிமுகவ விஜய் ஒரு பொருட்டா கூட மதிக்கல”… பதவியை ராஜினாமா செய்து செம்மலை போட்ட குண்டு… செம ஷாக்கில் வேலுமணி…!

Spread the love

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, அதிமுகவில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகளால் வேதனையடைந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக நாளுக்கு நாள் பலவீனப்பட்டுக் கொண்டே போகிறது என்றும், மூத்த தலைவர்கள் தங்களது ஈகோவை கைவிட்டால் மட்டுமே கட்சியைக் காப்பாற்ற முடியும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், தான் வேறு எந்தக் கட்சியிலும் இணையப் போவதில்லை என்றும், தனது விலகலுக்குப் பிறகாவது அதிமுக தலைவர்கள் ஒன்றிணைந்து பேசி ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் உருகமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. இந்த அரசியல் மாற்றத்திற்குப் பிறகு அதிமுகவில் பிளவு எட்டிப்பார்த்துள்ளது. அதிமுகவில் வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏ-க்களில் ஒரு பிரிவினர், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்றக் குழுத் தலைவர்களை நியமித்தது போல, வேலுமணி தரப்பும் தங்களது நிர்வாகிகளை நியமித்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளதால், “யார் உண்மையான அதிமுக?” என்ற அதிகாரப் போட்டி தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில் தவெக அரசு கோரிய நம்பிக்கை தீர்மானத்தின் போது இந்த பிளவு வெளிப்படையாக உடைந்தது. எடப்பாடி தரப்பு கொறடா அக்னி கிருஷ்ணமூர்த்தி அரசுக்கு எதிராக வாக்களிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு மாறாக வேலுமணி தரப்பைச் சேர்ந்த 24 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியான அன்றைய தினமே, முதலமைச்சர் விஜய் நேரடியாக சி.வி. சண்முகத்தின் அலுவலகத்திற்குச் சென்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. இதற்குப் பதிலடியாக, எடப்பாடி பழனிசாமி எதிர் தரப்பைச் சேர்ந்த நிர்வாகிகளையும் மாவட்டச் செயலாளர்களையும் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி வருகிறார். மேலும், அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தக்க வைக்க அவர்களுக்கு அமைச்சர் மற்றும் வாரிய பதவிகள் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறப்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாகக் கருதப்பட்ட செம்மலை, தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பதவியை விட்டு விலகியுள்ளார். தவெக அரசுக்கு ஆதரவு அளித்த அதிமுகவினருக்கு இதுவரை அமைச்சர் பதவிகள் எதுவும் அறிவிக்கப்படாததைச் சுட்டிக்காட்டிய செம்மலை, “முதலமைச்சர் விஜய் அதிமுகவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். செம்மலையின் இந்த திடீர் விலகலும், தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவின் ஒரு தரப்பு திரும்பியிருப்பதும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“Confident-ah இருங்க”-ன்னு சொன்னது குற்றவாளிகளுக்கா?… கள்ள மௌனத்தை கலைப்பாரா முதல்வர் விஜய்?… எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

3 minutes ago

தமிழகத்தில் என்னதான் நடக்கிறது?… Law & Order எங்கே போச்சு?… 12 பேர் மாயமான விவகாரத்தில் அரசை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய வானதி சீனிவாசன்…!!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி…

9 minutes ago

இது சரியா? தவறா?… ‘நோ என்ட்ரி’!… 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடை… பரபரப்பை கிளப்பிய ஹோட்டல்… விதிமுறையால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்…!!

கனடாவின் வின்னிபெக் நகரில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள 'மிஸ் கிறிஸ்டின்ஸ் கிச்சன்' என்ற ஜமைக்கன் உணவகம், 15 வயதுக்கு உட்பட்ட…

14 minutes ago

அடகடவுளே..! நொறுங்கிய மின்சார ரிக்‌ஷா… தடுப்புகள் இல்லாததால் விபரீதம்… தவறி விழுந்த ஓட்டுநர்… பதைபதைக்க வைக்கும் விபத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் பகுதியில், பால் கேன்களை ஏற்றிக்கொண்டு சென்ற மின்சார ரிக்‌ஷா ஒன்று, பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்கள்…

24 minutes ago

திகில் நிமிடங்கள்!…நொடியில் தப்பிய உயிர்… பைக்கில் சென்ற தம்பதி மீது சரிந்து விழுந்த ராட்சத தூண்… வெளியான பகீர் CCTV காட்சி…!!

காசிப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுவா சாலையில், இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த தம்பதியினர் மீது அரசு விளம்பரப்…

31 minutes ago

இப்படியொரு பரிசா?… லைசென்ஸ் கூட இல்லை… ஆனால் 15 வயது மகனுக்கு ரூ.1.62 கோடி BMW கார்… இணையத்தில் வெடித்த விவாதம்…!!

மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்திலுள்ள பராஜ் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷம்சுதீன் மித்யா, தனது 15 வயது…

41 minutes ago