தமிழ் சினிமாவில் தனக்கென தனது தனித்துவமான படங்களின் மூலம் ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. ஆனால் அந்த படம் அவரின் தந்தையின் பெயரில் ரிலீஸ் ஆனது.
அதன் பின்னர் அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி , புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன மற்றும் என் ஜி கே ஆகிய திரைப்படங்கள் அவருக்கு தனித்த அடையாளத்தை உருவாக்கின. ஆனால் அதன் பிறகு அவர் எடுத்த படங்கள் அவரின் தொடக்கக் கால படங்கள் கொடுத்த தாக்கத்தைக் கொடுக்கவில்லை.தொடர்ந்து அவர் எடுத்த இரண்டாம் உலகம், என் ஜி கே மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன.
ஒரு கட்டத்தில் அவர் இயக்கிய படங்கள் வரிசையாக தோல்வி அடைய அவர் நடிகராகவும் அறிமுகமானார். அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள ராயன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தனுஷின் இன்றைய வளர்ச்சிக்கு செல்வராகவன்தான் அடித்தளமிட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனாலும் செல்வராகவன் ஒரு கட்டத்துக்கு மேல் தனுஷின் சினிமா முடிவுகளில் தலையிடுவதில்லை. ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் இயக்குனர் பிரபு சாலமன் தனுஷுக்குக் கதை சொன்னபோது அவரது படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு நடி எனக் கூறியுள்ளார்.
அப்போது உருவானதுதான் ‘தொடரி’ திரைப்படம். அந்த திரைப்படம் தனுஷின் திரை வாழ்க்கையில் ரிலீஸான சூர மொக்கை, அட்டர் ப்ளாப் படங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது.