“தேர்தல் முடிந்ததும் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன்” என அழுத்தமாகச் சூளுரைத்திருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. ஆனால், தேர்தல் முடிந்து நாட்களாகியும் அவர் இன்னும் தன் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள், “சொன்ன சொல் என்னாச்சு? எல்லாம் காற்றில் போயாச்சா?” என்று அவருக்கே வாட்ஸ்அப்பில் நேரடியாகக் கேள்வி எழுப்பி அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் இந்த விவகாரம் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதற்கிடையே, தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே 90 சதவீத காங்கிரஸாரின் உணர்வாக இருந்தது. இதனை மதித்து அந்த நிலைப்பாட்டை எடுக்க ராகுல் காந்தியும் முன்வந்தார். ஆனால், திமுகவின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்ட செல்வப்பெருந்தகை, அந்த முயற்சியைத் தடுத்து திமுகவுடனேயே கூட்டணியை நீட்டிக்க வைத்தார் என்றும், திமுகவிடம் பெற்ற லாப ஆதாயங்களுக்காக அவர் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம் ஆகியோரும் ஒத்துழைத்ததாகக் கூறி கதர் சட்டையினர் டெல்லி மேலிடத்திற்குத் தங்களின் கண்டனக் குரல்களைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றனர்.
ராகுல் காந்தியின் முடிவுக்கு எதிராக அரசியல் செய்த செல்வப்பெருந்தகையை ஏன் இன்னும் தலைவர் பதவியில் வைத்திருக்கிறீர்கள் என்றும், தவறு செய்பவர்களையும் துரோகம் இழைப்பவர்களையும் உடனுக்குடன் தண்டிக்காவிட்டால் கட்சி எப்படி வளரும் என்றும் தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, செல்வப்பெருந்தகையைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, புதிய முகம் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இது குறித்து நேற்று டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ள நிலையில், விரைவில் தமிழக காங்கிரஸில் தலைமை மாற்றம் வரலாம் எனப் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நிலைமை இப்படி இருக்க, “என் மகளுக்கு வரும் 18-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அதுவரையிலாவது என்னை பதவியிலிருந்து நீக்கிவிடாதீர்கள்” என்று மல்லிகார்ஜுன கார்கேவிடம் செல்வப்பெருந்தகை உருக்கமாகக் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதற்கு கார்கே ஆறுதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், செல்வப்பெருந்தகையின் வலதுகரமாக இருக்கும் நால்வர் அணியினர், மாவட்ட தலைவர்களுக்கும் முக்கிய நிர்வாகிகளுக்கும் போன் செய்து, “தலைவர் மாற்றம் இருக்காது; உள்ளாட்சித் தேர்தல் வரை அவர்தான் தலைவர். எனவே, அவரின் மகளின் திருமணத்திற்கு 10 லட்சம் மதிப்பிலான நகைகளை அன்பளிப்பாகக் கொடுத்து தலைவரைச் சந்தோஷப்படுத்துங்கள், உங்களுக்கான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்” என மூளைச்சலவை செய்து வருவதாகவும் சத்தியமூர்த்தி பவனில் புதிய ஹாட் டாபிக் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் ஞானசௌந்தரி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சப்…
அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…
தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…
மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…
நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…