2026 தேர்தல் கூட்டணி… விஜய்யுடன் ரகசிய டீலிங் பேசும் காங்கிரஸ்?… ஒரே போடாய் போட்ட செல்வபெருந்தகை…!

Spread the love

திமுகவின் கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் சங்கம் வகித்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே அனைத்து தேர்தல்களிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தமிழகத்தில் போட்டியிட்டு வருகின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரசுக்கு கணிசமான தொகுதிகளை திமுக ஒதுக்கி வரும் நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் திமுகவுடன் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. கூட்டணி குறித்தும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்தும் பேசுவதற்காகவே காங்கிரஸ் தரப்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு சமீபத்தில் அறிவாலயம் சென்ற திமுக தலைவர் மற்றும் முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் இந்த முறை அதிகமான தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளது. ஆனால் திடீரென்று ராகுல் காந்தியின் வலது கரமாக பார்க்கப்படும் பிரவீன் சக்கரவர்த்தி ரகசியமாக விஜயை சந்தித்து 2 மணி நேரம் பேசி இருந்தார். ஏற்கனவே விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி விரும்புகிறார் என்ற செய்தியை வெளியாகி இருந்தது. எனவே திமுக குறைவான தொகுதிகளை ஒதுக்கினால் காங்கிரஸ் தமிழக வெற்றிக்கழகம் பக்கம் செல்லுமா என்ற சந்தேகமும் கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயை சந்திக்க யாரோ போனார்கள், அது பற்றி எனக்கு தெரியாது. திமுகவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. பின் கதவு வழியாக செல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. மக்களை சந்தித்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்று செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்

Nanthini

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

5 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

6 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

6 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

6 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

6 மணத்தியாலங்கள் ago