ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராகக் கூட்டணிக் கட்சிகள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக நேர்மையாகவும் வெளிப்படையாகவும் ஒப்புக்கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்பது அரசியல் நேர்மையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தலைவர் ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டுப் பேசிய அவர், இந்தக் கோரிக்கையை வலுவாகப் பதிவு செய்தார்.
தற்போது தமிழக அரசியல் களத்தில் தவெகவினர் தங்கள் தலைவர் விஜய்யை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திப் பேசி வருகின்றனர். தொண்டர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை விஜய்யைப் பிரதமர் வேட்பாளராகப் சித்தரிப்பது, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் சங்கடத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியைத் தங்கள் நாட்டின் தலைவராகப் பார்க்கும் காங்கிரஸாருக்கு, தவெகவினரின் இந்த நகர்வுகள் பெரும் எரிச்சலை அளித்துள்ளன.
கூட்டணி குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் எதற்காகக் கூட்டணி வைக்க வேண்டும் என்று நேரடியாகவே கேள்வி எழுப்பியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளுக்காகத் துணிச்சலுடன் குரல் கொடுப்பதைப் போல, அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் மக்களுக்காகவும் தர்மத்திற்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எந்தவொரு ஐந்தாண்டுத் திட்டமாக இருந்தாலும், எதிர்காலத் திட்டமாக இருந்தாலும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் மக்கள் கருத்து கேட்கப்பட்டது போல அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்பதே உண்மையான அரசியல் கூட்டணிக்கு அழகு என்றும், அதையே இன்றைய நாளில் உறுதியேற்போம் என்றும் அவர் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம்…
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில்,…
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் எதற்கு கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி…
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார்…
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப்…
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் கோருவதற்கு முன்பே ரூ. 45.9 லட்சம் மதிப்பிலான அழகுபடுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுத் திறக்கப்பட்ட விவகாரம், தமிழக…