பீகார் தேர்தலில் பாஜக பெருன்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றிவாகை சூட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தோல்வியால் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டுமென பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்” என எச்சரித்துள்ளார். முன்னதாக, “காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள். காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை”என்று ராஜேந்திர பாலாஜி விமர்சித்திருந்தார்.
