தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளை விமர்சித்துப் பேசி வருவதற்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான செல்லூர் ராஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் கட்டிக்காத்த ஒரு பேரியக்கத்தை விமர்சிக்க விஜய்க்கு என்ன தைரியம் இருக்க வேண்டும்?. அரசியலுக்குப் புதிதாக வந்துள்ள விஜய், கள யதார்த்தம் தெரியாமல் பேசுவதாகவும், அனுபவம் வாய்ந்த தலைவர்களை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுகவின் வாக்கு வங்கி வலுவாக இருப்பதாகவும், சினிமாவையும் அரசியலையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் செல்லூர் ராஜு தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு விஜய் காய்களை நகர்த்தி வரும் நிலையில், திமுகவை விட அதிமுகவினர் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். விஜய்யின் அரசியல் வருகை அதிமுகவின் வாக்குகளைப் பாதிக்கும் என்ற பேச்சுகள் நிலவும் சூழலில், செல்லூர் ராஜுவின் இந்த எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
