5 தொகுதிகளுக்கு திடீர் பயணம்…. “கொத்து பரோட்டா போடுவாங்கன்னு பயமா?”….. CM விஜயை வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜு….!

By Nanthini on கார்த்திகை 2, 2026

Spread the love

தமிழக அரசியலில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவரும் முதல்வருமான விஜய்யை அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் தங்களை ‘கொத்து பரோட்டா’ போட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று வருகிறார் என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். நடந்து முடிந்த 2 தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், தான் எதிர்பார்த்த அளவிற்கான வாக்குகள் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியும் ஏமாற்றமும் முதல்வருக்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாகவே, தற்போது இடைத்தேர்தலை சந்திக்கவுள்ள 5 தொகுதிகளிலும் மக்கள் செல்வாக்கை மீட்டெடுக்க முதல்வர் தீவிர முயற்சி செய்து வருவதாக செல்லூர் ராஜு குற்றம்சாட்டினார். மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக அரசுப் பணத்தைப் பயன்படுத்திப் பல புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகின்றார் என்றும் சாடினார். தேர்தல் சமயத்தில் அரசாங்கப் பணத்தில் திட்டங்களை அறிவித்து வாக்கு சேகரிக்க முயல்வது மக்களின் உண்மையான ஆதரவைப் பெற்றுத்தராது எனக் குறிப்பிட்ட அவர், ஆளுங்கட்சியின் இந்த வியூகம் வரவிருக்கும் இடைத்தேர்தலில் எடுபடாது என்றும் தனது பேட்டியில் காட்டமாகக் கூறினார்.