தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநிலப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கும், திமுகவுக்கும் இடையிலான அரசியல் மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஆதவ் அர்ஜுனாவை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். பணம் இருக்கிறது என்பதற்காக எதையும் விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்ற மமதையில் இருப்பவர்களுக்கு, வரும் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் திமுக தக்க பாடம் புகட்டும் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவின் கடந்த கால அரசியல் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டிய சேகர் பாபு, “ஒரு காலத்தில் எங்களைப் பார்த்து ‘லீடர்.. லீடர்..’ என்று கைகட்டி நின்று கொண்டிருந்தவர், இன்று எங்களது இயக்கத்தின் அறிவைப் பற்றிப் பேசுகிறார்” என்று சாடினார். அத்தகைய நபர்கள் தங்களது அறிவைப் பரிசோதனை செய்துகொள்ள சரியான இடம் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைதான் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார். மேலும், திமுகவைப் போன்ற ஒரு பவள விழா கண்ட பேரியக்கத்தை, இப்போதுதான் முளைத்துள்ள ‘பால்வாடி’ இயக்கமான தவெக விமர்சிப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
சமீபகாலமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் தடுத்தது திமுகதான் என்று ஆதவ் அர்ஜுனா முன்வைத்த குற்றச்சாட்டையும் சேகர் பாபு வன்மையாக மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ரஜினிகாந்தின் தெளிவான விளக்கத்திற்குப் பிறகு ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கோரியிருந்தாலும், தொடர்ந்து திமுக மீது வன்மத்தைக் கக்கி வருவதாக அமைச்சர் குற்றம்சாட்டினார். அதிகாரம் கைக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு திமிருடன் பேசுபவர்களை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது சேகர் பாபுவின் வாதமாக இருந்தது.
இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…
கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…