1984 செண்டிமெண்ட்… ஸ்டாலினுக்கு போடப்பட்ட ஸ்கெட்ச்…. பதவியை ராஜினாமா செய்யும் சேகர்பாபு… யாரும் எதிர்ப்பார்க்காத அதிரடி டுவிஸ்ட்….!

By Nanthini on ஆடி 24, 2026

Spread the love

துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ சேகர்பாபு தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1984-க்குப் பிறகு திமுக தலைவராக இருப்பவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் இருப்பதை இரண்டாம் கட்டத் தலைவர்கள் விரும்பாத நிலையில், தீவிர வற்புறுத்தலுக்குப் பிறகே ஸ்டாலின் இதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடக்கத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் களமிறங்கலாம் எனப் பேசப்பட்டு வந்த போதிலும், தற்போது சென்னை துறைமுகம் தொகுதியிலேயே அவரைப் போட்டியிட வைக்க திமுகவினர் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.