ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன் சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு மே மாதம் சீதாராமன் சீரியல் தொடங்கப்பட்டது. இதில் பிரியங்கா நல்காரி ஹீரோயினாக நடித்தார். முன்னதாக ரோஜா சீரியலில் நடிப்பதன் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. அவர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
சீதாராமன் சீரியலில் இருந்து பிரியங்கா நல்காரி ஒரு சில காரணங்களால் விலகி விட்டார். அதன் பிறகு அவருக்கு பதிலாக ஸ்ரீ பிரியங்கா ஹீரோயினாக நடித்தார். இந்த சீரியலில் ஜே. டி சோசோ, ரேஷ்மா பசுபுலெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
நட்பு, காதல் சமூக எதிர்ப்புகளை மையமாக வைத்து சீதா ராமன் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. நாயகனின் மாற்றாந் தாய்க்கும் மருமகளுக்கும் இடையே ஏற்படும் சண்டை முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தற்போது ஒரு வருடம் ஆவதற்குள் சீதாராமன் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.