நாங்க கல்யாணம் பண்ணிக்கல.. ஒண்ணா இருந்தது உண்மைதான்.. பப்லு பிரிவு குறித்து சீத்தல் வெளியிட்ட தகவல்..

By Ranjith Kumar on மார்ச் 17, 2024

Spread the love

பாண்டிய நாட்டு தங்கம் படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் தான் பப்லு பிரித்திவிராஜ். இவர் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து தற்போது சீரியல் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் புதிய மன்னர்கள், மனைவி ஒரு மாணிக்கம், ஒரு தாயின் சபதம், சிகரம் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக வளம் வந்து கொண்டிருந்தார். இவர் தற்போது வாணி ராணி, அன்பே வா போன்ற சீரியலில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார்.

பீனா என்பவரை 1994 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டு தற்போது வரை நல்ல இல்லற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். இவருக்கு அஹீட் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. நல்லபடி சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு இவர் பிரிந்து விட்டார். அதற்கு அடுத்ததாக கொரோனா காலகட்டத்தில் சீத்தல் என்பவரை காதலித்து வருவதாகவும் அவருடன் லிவிங் டுகெதர் இருப்பதாகவும் வெளியே தெரிவித்து இருந்தார். இதனால் பல சர்ச்சைகள் கிளம்பியது. ஆனால் அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இருவரும் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்க ஆரம்பித்தார்கள்.

   

இவர்களை பலவிதமாக பலரும் விமர்சித்து வந்தார்கள். ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக தன் சோசியல் மீடியா பக்கம் மூலம் தன் வாழ்க்கையை வெளி உலகத்திற்கு காட்டிக் கொண்டிருந்தார்கள். தற்போது சீத்தல் சில நாட்களுக்கு முன்னால் தன் இணையப் பக்கத்தில் இருக்கும் பிருதிவியின் புகைப்படங்களை வீடியோவையும் டெலீட் செய்து உள்ளார். அதற்கு பலரும் என்ன காரணம் என்று கேட்டு வந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பதில் அளித்துள்ளார்.

   

அதாவது, நாங்கள் இருவரும் லிவிங் டு கெதரில் இருந்தது உண்மைதான், எங்களது வாழ்க்கை அந்த சமயத்தில் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஆனால் தற்போது இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து விட்டோம். இதுதான் நாங்கள் விடை பெறவேண்டிய நேரம் என்று நான் நினைக்கிறேன். அவருடன் இருந்த நினைவு எனக்கு நீங்காத ஒரு பொக்கிஷம்,

 

ஆனால் தற்போது பிரித்வி அவரின் வாழ்க்கையை தனியாக பார்ப்பது தான் நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். இதற்கு நீங்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். என்று ஸ்டோரி மூலம் பிரித்வி அவர்களை பிரிந்ததை சீத்தல் வெளிப்படுத்தி உள்ளார்.