அண்ணனா..? தம்பியா..? அரசியலில் யாரு கெத்து..? விஜய் கூட்டணி குறித்த கேள்வியால் சீமான் டென்ஷன்…!!

By Soundarya on மாசி 19, 2026

Spread the love

நாம் தமிழர் கட்சியின் (NTK) மாநாடு வரும் பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள நிலையில், அதன் ஏற்பாடுகளைப் பார்வையிட்ட சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக வெற்றிக் கழகம் (TVK) குறித்துப் பேசிய அவர், “நான் எந்நேரமும் எதிரியைக் குறித்துக் கொண்டுதான் பிறந்தேன்; த.வெ.க-வை எதிர்ப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை” என்று கூறினார். மேலும், “தற்போது விஜய் பேசி வரும் பல அரசியல் வசனங்கள் என்னுடையவை தான்; நான் 16 ஆண்டுகளாகக் களத்தில் இருக்கிறேன்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, “விஜய் அழைத்தால் கூட்டணிக்குச் செல்வீர்களா?” என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்வியால் சீமான் மிகுந்த கோபமடைந்தார். அதற்குப் பதிலளித்த அவர், “நான் கட்சி தொடங்கி, எந்தக் கூட்டணியும் இன்றி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகுதான் அவர் அரசியலுக்கே வந்திருக்கிறார்; நான் தான் அவருக்கு அழைப்பு விடுக்க வேண்டுமே தவிர, அவர் எனக்கு அழைப்பு விடுக்க முடியாது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். தம்பி என்ற முறையில் விஜய்யை ஆதரிப்பேன் என்றும், ஆனால் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்