“யாருகிட்ட பூச்சாண்டி காட்டுறீங்க”… விஜய்க்கு பின்னாடி பாஜக தான் இருக்கு… பரபரப்பை கிளப்பிவிட்ட சீமான்…!

By Nanthini on ஐப்பசி 28, 2025

Spread the love

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் அவர்களது குடும்பத்திற்கு 1.85 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். மேலும் உங்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் என்று உருக்கமாக பேசியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதன்மை காரணம் விஜய் தான். தவறு இல்லை என்றால் ஏன் முன் ஜாமீன் கேட்கிறீர்கள்? குற்றத்திற்கு காரணமானவரையே சிபிஐ விசாரணை நடத்தாது என்றால் பிறகு எப்படி உண்மையான நியாயம் வெளியே வரும்? யாரை பார்க்க கூட்டம் கூடியதோ அந்த நபர் மீது சிபிஐ எஃப் ஐ ஆர் பதிவு செய்யாதது ஏன்?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையில் இருக்கும் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தனிமையில் எப்படி சந்தித்து பேச முடியும்? 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டு நேரில் சந்தித்து பேசினால் நடந்த உண்மை எப்படி வெளிச்சத்திற்கு வரும். கூட்டணியில் சேர்ப்பதற்காகத்தான் ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பாஜக உடனான கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் அவர் மீது வழக்கு பதிவு செய்வார்கள். சிபிஐ விசாரணைக்கு மாற்றியதும் முன் ஜாமின் மனுவை ஆனந்த் திரும்ப பெறுகிறார் என்றால் சிபிஐ காப்பாற்ற தானே செய்கின்றது என்று சீமான் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.