விஜயால் கார் தர முடியாது, அம்பேத்கர் போட்டோவை மட்டுமே தர முடியும் என்று சீமான் கிண்டல் அடித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், சிவன் ஆட்டத்தை பார்த்து இருப்பீர்கள். அதையும் சினிமாவில் தான் பார்த்திருப்பீர்கள். சீமானின் ஆட்டத்தை இந்த களத்தில் பார்க்கப் போகிறீர்கள். என்னுடைய ஆட்சியில் பசி இல்லாத நாடு, அனைவருக்கும் வேலை, மருத்துவம், படிப்பை எப்படி கொடுத்துள்ளேன் என்று காண்பிப்பேன். மோட்டார் பைக் தருகிறேன், கார் தருகிறேன் என்று கூறுவதற்கு நான் என்ன பிக்காளி பையலா? வீட்டுக்கு ஒரு கார் தருகிறேன் என்று விஜய் கூறியுள்ளார்.
வெற்றி பெற்றதற்கு பிறகு பொதுமக்கள் கேள்வி கேட்டால் அனைவருடைய வீட்டுக்கும் அம்பேத்கர் போட்டோவை அனுப்பி வைப்பார். அதில் கார் உள்ளது என்று கூறுவார் என்று விஜயை மறைமுகமாக சீமான் விமர்சித்துள்ளார். அண்ணல் அம்பேத்கர் தான் உலகில் சிறந்த கார் என கூறுவார். வருகின்ற தேர்தலில் ஒன்று ஆட்சி அமைப்பேன் இல்லை என்றால் என் தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. பிப்ரவரியில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் செங்கோட்டையன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அதிமுகவில் கட்சி பதவி தேவையில்லை என்பதால் அவர் வேறு கட்சிக்கு செல்லலாம். நான் ஆசிரமங்கள் மற்றும் மனங்களில் இருந்து வரவில்லை. நான் ஒரு காட்டான், எங்களை கொஞ்சம் கொஞ்சமாக பக்குவப்படுத்தி மேலே ஏறி வந்துள்ளோம். செய்தியாளர்கள் நல்ல கேள்விகளை கேட்டால் நல்ல பதிலை நான் சொல்லுவேன். கோபப்படாமல் இருந்திருந்தால் நான் கோடம்பாக்கத்தில் இருந்து நல்ல படங்கள் எடுத்து பிழைத்திருப்பேன். கோபம் தான் என்னை எங்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…