அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பாசமுத்திரம் தொகுதியில் தாம் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பாகவே சீமான் இந்த முடிவை வெளியிட்டது, அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அனைத்து சாதி மற்றும் மக்களுக்குமான பொது வேட்பாளராகக் களம் காண்பதாகக் கூறும் சீமானின் இந்த அவசர அறிவிப்பு, தேர்தல் வியூகத்தில் அவருக்குப் பலமா அல்லது பலவீனமா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.
முன்னதாக, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் மறைமுக ஆதரவோடு ஒரு பொது வேட்பாளராகப் போட்டியிட சீமான் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அந்தத் திட்டங்கள் கைகூடாத நிலையில்தான், அவர் முந்திக்கொண்டு வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டதாகப் பார்க்கப்படுகிறது. மற்றொருபுறம், தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகளான இசக்கி சுப்பையா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், விஜயபாஸ்கர் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு வாய்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தொகுதி ஒதுக்கீடுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்த்தரப்பு கணக்குப் போட்டாலும், பிரதான கட்சிகள் எதுவுமே இன்னும் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் சீமானின் இந்த அதிரடி முடிவு அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
சீமானின் இந்த முன்கூட்டிய அறிவிப்பு நாம் தமிழர் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவே பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். வழக்கமாக நாம் தமிழர் கட்சி தேர்தல் பணிகளை முன்னதாகவே தொடங்கும் என்ற போதிலும், திமுக போன்ற எதிர்க்கட்சிகள் சீமானுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்த இது போதிய கால அவகாசத்தை வழங்கியுள்ளது. ஏற்கனவே சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தவெகவினர் சீமானுக்கு எதிரான கருத்துப் பிரச்சாரங்களைத் தொடங்கிவிட்ட நிலையில், வேட்பாளர் யார் என்பது முன்னதாகவே தெரிந்துவிட்டது எதிரத்தரப்பினரின் வியூகங்களை மேலும் கூர்மையாக்க வழிவகுத்துள்ளது.
தேர்தல் நெருங்கும் கடைசி நேரத்தில் சீமான் போட்டியிடும் அறிவிப்பு வெளியாகியிருந்தால், அது வாக்காளர்கள் மத்தியில் ஒருவித அனுதாப அலையை அல்லது எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கக்கூடும். ஆனால், தற்போதே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டதால், அந்த அனுதாபச் சூழலைக்கூட தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள மற்ற அரசியல் கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியே அதிக நேரத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. எதிர்த்தரப்பின் பிரச்சார முனைகளை உடைத்து, இந்த விமர்சனங்களைக் கடந்து சீமான் அம்பாசமுத்திரத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…
பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஷூ மற்றும் பேக் பழுதுபார்க்கும் கடையில் 23 வயதான…
உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் தர்காபூர் பகுதியில் சிறுமி நிஷா கதேரியாவுக்கு நேர்ந்துள்ள கொடூர மரணம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுந்தா மாதா மலைக் கோயில் வளாகத்தில், பெண் பக்தர்களிடம் சிலர் தகாத முறையில்…
குஜராத் மாநிலத்தில் சாலையோர நடைபாதையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மோதியதில், தாயும்…