நீங்கதான் ஹீரோ…! திருடர்களை பிடித்து தனி ஆளாக கெத்து காட்டிய நபர்… மிரண்ட மக்கள்…. வைரலாகும் திகில் வீடியோ…!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியில், பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுவிட்டுத் தப்பியோடிய மூன்று கொள்ளைக்காரர்களை, ஒருவர் தனி ஆளாக நின்று துணிச்சலுடன் போராடி மடக்கிப் பிடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

போபாலின் வல்லப் நகர்-2 பகுதியில் இரண்டு பெண்களிடம் மர்ம நபர்கள் தங்கச் சங்கிலிகளைப் பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்றனர். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த முகமது அக்தர் கான் என்பவர், சற்றும் யோசிக்காமல் அவர்களின் பைக்குக்கு நேராக நின்று வழிமறித்துள்ளார். மேலும், ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த மூன்று பேரையும் எதிர்த்துத் தனி ஆளாகக் கைக்கலப்பில் ஈடுபட்டு அவர்களைக் கீழே தள்ளினார்.

இந்தத் துணிச்சலான செயலின் மூலம் திருடர்களிடமிருந்து பறிக்கப்பட்ட இரண்டு தங்கச் சங்கிலிகளையும் மீட்டுப் பாதிக்கப்பட்ட பெண்களிடமே அவர் ஒப்படைத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த அரேரா ஹில்ஸ் காவல்துறையினர், அந்த மூன்று குற்றவாளிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், முகமது அக்தர் கானின் வீரத்தைப் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“உடனடி விசாரணை வேண்டும்!”… சிறுமி மரணத்தில் களமிறங்கிய பீம் சேனா… ஆதாரங்கள் அழிக்கப்படுகிறதா… கிளம்பும் புது சர்ச்சை…!!

உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் தர்காபூர் பகுதியில் சிறுமி நிஷா கதேரியாவுக்கு நேர்ந்துள்ள கொடூர மரணம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…

5 minutes ago

ஐயோ சந்நிதியிலேயே இப்படியா?… கேமராவில் சிக்கிய அசிங்கம்… புனித தலத்தில் இவ்வளவு துணிச்சலா… பக்தர்கள் கொந்தளிப்பு…!!

ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுந்தா மாதா மலைக் கோயில் வளாகத்தில், பெண் பக்தர்களிடம் சிலர் தகாத முறையில்…

15 minutes ago

மின்னல் வேகத்தில் வந்த கார்…! நடைபாதையில் ஓய்வு எடுத்த தாய், மகன் துடிதுடித்து பலி… தம்பதியினர் படுகாயம்… கோர விபத்து…!!

குஜராத் மாநிலத்தில் சாலையோர நடைபாதையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த குடும்பத்தினர் மீது அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மோதியதில், தாயும்…

20 minutes ago

அந்த சில நிமிடங்கள்!… மாணவி மீது வெறிச்செயல்… இணையத்தில் பரவி உலுக்கிய வீடியோ… அடுத்த கணமே போலீஸ் அதிரடி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில், கடந்த அக்டோபர் 23 அன்று கல்லூரிக்கு நடந்துகொண்டிருந்த 19 வயது மாணவியை வழிமறித்துத் தாக்கிய…

28 minutes ago