“திமுக ஆட்சியா? தவெக ஆட்சியா?”… CM விஜய் போட்ட கையெழுத்தைக் கிழித்துத் தொங்கவிட்ட சீமான்… பரபரப்பு பேட்டி…!

By Nanthini on வைகாசி 20, 2026

Spread the love

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான ஹாஜா முகைதீன், போதைக் கும்பலால் அவரது வீட்டின் வாசலிலேயே கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் மற்றும் ஊடக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதல் குறித்து ஆழ்ந்த கண்டனத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தம்பி ஹாஜா முகைதீனுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்ததுடன், அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டு வர கட்சி எப்போதும் துணைநிற்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவத்தை முன்வைத்து, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியைச் சீமான் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார். போதைப்பொருள் விற்பனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு நேர்மையான ஊடகவியலாளருக்கே இந்த நிலை என்றால், சாமானிய எளிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது என அவர் சாடியுள்ளார். மேலும், தமிழகத்தில் நாள்தோறும் போதைக்கும்பலின் அட்டூழியங்களும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் தொடர்ந்தவண்ணமே உள்ளன என்றும், முந்தைய திமுக ஆட்சியில் நடந்த அதே கொடுமைகள்தான் தற்போதும் தொடர்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

   

“நடப்பது தவெகவின் ஆட்சியா? இல்லை! திமுகவின் ஆட்சியா?.. இதுதான் மாற்று அரசியலா?..” என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், முதல்வர் விஜய் மீதும் தனது விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார். தமிழக முதல்வராகப் பதவியேற்றதும், ‘போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு’ என்ற கோப்பில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டதை நினைவு கூர்ந்த சீமான், தற்போது அந்தப் படை என்ன செய்து கொண்டிருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியாக, செய்தியாளர் ஹாஜா முகைதீன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.