அம்மாடியோ.. விலையைக் கேட்டா தலை சுத்திடும்..! ஒரே நைட்டில் ‘சீலா’ மீனுக்கு வந்த வாழ்வு… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

By Swetha on ஆனி 7, 2026

Spread the love

குறைந்த விலையில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதால் பெரும்பாலான மக்கள் மீன்களை விரும்பி வாங்குவது வழக்கம். ஆனால், தற்போது தூத்துக்குடியில் மீன்களின் விலை சாமானிய மக்கள் அதிர்ச்சியடையும் வகையில் கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவு சமைக்க ஆசையோடு மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள், தற்போதைய விலை உயர்வைக் கேட்டு வாங்குவதற்கே யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் மார்க்கெட்டில் ஒரு கிலோ சீலா மீன் ரூ.1,600 வரை விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே விரும்பும் சீலா மீனுக்கு ஒரே இரவில் இவ்வளவு விலை உயர்ந்திருப்பது ஓவர் என்று மக்கள் புலம்புகின்றனர். இதேபோல், குழந்தைகளுக்குப் பழக ஏற்ற முள் அதிகம் இல்லாத பாறை மீன் கிலோ ரூ.550-க்கு விற்பனையாவதால், இதற்குப் பதிலாக பிராய்லர் கோழியே வாங்கிவிடலாம் என்று மக்கள் சலிப்படைந்து கொள்கின்றனர்.

   

நம்மூரில் மத்தி மீன் என்று அழைக்கப்படும் சாளை மீன் ஒரு கூடை ரூ.2,000 என விற்கப்பட்டு வருகிறது. மொத்த விலையிலேயே கூடை இவ்வளவு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், அதனை வாங்கித் தெருக்களில் கொண்டு சென்று சில்லறையாக வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக மீன் வரத்துக் குறைவாலும், கடுமையான விலை உயர்வாலும் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரும் கவலையடைந்துள்ளனர்.