மும்பையின் மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் கைபேசிகளை நள்ளிரவில் திருட முயன்ற நபரை, அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கையும் களவுமாகப் பிடித்துள்ளார். சிசிடிவி பதிவுகளின்படி, அதிகாலை 2:38 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய நபர் அப்பகுதியில் ஏற்கனவே நான்கு முதல் ஐந்து கைபேசிகளைத் திருடியதாகக் கூறப்படுகிறது. மீண்டும் ஒரு திருட்டில் ஈடுபட முயன்றபோது, விழிப்புடன் இருந்த பாதுகாப்புப் பணியாளர் அவரைப் பிடிப்பதற்காகத் துரத்திச் சென்று வெற்றிகரமாகப் மடக்கிப் பிடித்தார்.
https://www.instagram.com/reel/DbpZvvJMnBR/?utm_source=ig_web_button_share_sheet
பிடிபட்ட நபர் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, பாதுகாப்பு ஊழியர்கள் அவரைக் கயிற்றால் நாற்காலியில் கட்டி வைத்தனர். பின்னர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்த மும்பை காவல்துறையினர், அவரை மீட்டு விசாரணைக்காகக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
