பள்ளி விடுதியில் பகீர்..! மாணவனை ஓரினசேர்க்கை செய்து கழுத்தை அறுத்த பாதுகாவலர்… பாதுகாக்க வேண்டியவரே காலனான கொடுமை..!!

By Soundarya on சித்திரை 11, 2026

Spread the love

பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன், விடுதி சமையலர் மற்றும் பாதுகாவலரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியின் மாடியில் அந்தச் சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு மற்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விடுதியில் கேன்டீன் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த நபர், அந்தச் சிறுவனை வலுக்கட்டாயமாக ஓரினச் சேர்க்கைக்கு (Unnatural sex) உட்படுத்தியது தெரியவந்தது. இந்தக் கொடூரச் செயலுக்குப் பிறகு, சிறுவன் யாரிடமாவது சொல்லிவிடுவான் என்ற பயத்தில், அவனது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவனின் உறவினர்கள், குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

   

இந்தக் கொடூரக் கொலை தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கேன்டீன் பாதுகாவலரைக் கைது செய்துள்ளனர். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஊழியரே இத்தகைய வக்கிரம் பிடித்த செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் பீகாரில் விடுதி மாணவர்களின் பாதுகாப்பு குறித்தப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.