சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்தவர்தான் சேகர் (57) . இவர் காவலாளியாக பணி செய்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி அன்று காவல் பணியில் இருந்த போது, அந்த வழியாக வந்த ஜெசிகா (19) என்ற திருநங்கை நடந்து சென்றதாக தெரிகிறது.
சேகர், ஜெசிக்காவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாக தெரிகிறது. இதனால் கடும் கோபம் கொண்ட ஜெசிக்கா சேகரை பிடித்து கீழேத் தள்ளியதால் சேகரின் பின்பக்க தலையில் பலமாக அடிபட்டு காயமடைந்தார். பின்பு , ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் கிடந்ததாக தெரியவந்துள்ளது.
மறுநாள் காலையில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர் . சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்து போனார். இச்சம்பவத்தின் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து திருநங்கை ஜெசிகாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
