அதிமுக – திமுக ரகசிய டீலிங்?…. சி.வி.சண்முகம் கிளப்பிய புயல்… அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஓபன் டாக்…. அம்பலமான ரகசியம்…!

By Nanthini on ஆனி 15, 2026

Spread the love

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிமுக ஆட்சியமைக்க முயன்றதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பரப்பி வரும் தகவல் முற்றிலும் தவறானது என்று அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி விளக்கமளித்துள்ளார். அதிமுகவினர் சாரை சாரையாக மாற்றுக் கட்சிக்குச் செல்வதாகவும், சீட்டுக்கட்டுப் போல் கட்சி சரிவதாகவும் சி.வி. சண்முகம் கூறுவது அப்பட்டமான பொய் என்று சாடிய அவர், கடந்த காலங்களில் கட்சியில் இருந்து கொண்டு பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்தவர்கள் தான் தற்போது சுயநலத்திற்காக மாற்றுக் கட்சிக்குச் செல்கிறார்களேயொழிய, ரத்தமும் சதையுமான உண்மையான தொண்டர்கள் இப்போதும் அதிமுகவிலேயே தான் உறுதியோடு இருக்கிறார்கள் என்றும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி வலுவாகவே உள்ளது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.