தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் தான் திரிஷா. இவர் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய்யுடன் அதிக முறை ஜோடி சேர்ந்து நடித்த ஒரே நடிகையாவார். விஜயுடன் ஜோடி சேர்ந்து சுமார் ஐந்து படங்களுக்கு மேல் நடித்துள்ள திரிஷா அஜித்துடன் இணைந்து நான்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு முன்பே அவர் அஜித்துடன் இணைந்து நான்கு படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் இவர்கள் நடிக்கும் படங்களில் ஒரு ரகசிய ஒழிந்துள்ளது.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் மூலம் அஜித்தும் திரிஷாவும் 5வது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். இதற்கு முன்பு இவர்கள் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படங்களில் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது. அஜித்தும் திரிஷாவும் முதன் முதலில் ஒன்றாக சேர்ந்து நடித்த திரைப்படம் தான் ஜி. கடந்த 25 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் திரிஷா பள்ளி மாணவியாகவும் அஜித் கல்லூரி மாணவனாகவும் நடித்திருப்பார்கள். அப்படியே இருவருக்குள்ளும் காதல் மலரும். ஆனால் இந்த படத்தில் இவர்கள் இருவரும் ஜோடி சேர மாட்டார்கள்.
இதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு வெளியான கிரீடம் திரைப்படத்திலும் அஜித் மற்றும் திரிஷாவின் ஜோடி குறித்து பெரிதும் பேசப்பட்டது. ஆனால் இந்த திரைப்படத்தின் கதைப்படி ஹீரோவுக்கு போலீஸ் வேலை இல்லை என்ற பிறகு அஜித் மற்றும் திரிஷாவின் திருமணம் நின்றுவிடும். இறுதியாக அஜித் போலீஸ் ஆகிவிடுவார். ஆனால் இறுதியில் திரிஷாவும் அஜித்தும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது காண்பிக்கப்பட மாட்டாது.
2010 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படத்தில் அஜித் மற்றும் திரிஷா இருவரும் காதலர்களாக நடித்திருப்பார்கள். ஆனால் அஜித் திரிஷாவை தன்னுடைய ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்ள மட்டுமே செய்வார். இதனால் கடைசியில் திரிஷா “ஏன் நண்பனே என்னை ஈர்த்தாயோ” என்று அழுது கொண்டே காரில் சென்று விடுவார்.
2015 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் மற்றும் திரிஷா இடையேயான காதல் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இதற்கு முன்பு இருந்த படங்களைப் போல திருமணத்திற்கு முந்தைய நாள் த்ரிஷாவை வில்லன் கொன்று விடுவது போல கதை அமைந்திருக்கும்.
தற்போது இறுதியாக விடாமுயற்சி திரைப்படத்திலும் திரிஷா மற்றும் அஜித் ஐந்தாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் திரிஷா கடத்தப்படுவது போலவும் அவரை தேடி அஜித் செல்வது போலவும் தான் கதைகள் ஆரம்பிப்பதாக கூறப்படுகின்றது. அனைத்து படங்களைப் போல கடைசியில் அஜித் மற்றும் திரிஷா இணைவார்கள் அல்லது பிரிவார்களா என்பது விடா முயற்சி படத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும்.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்திலும் திரிஷா தான் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திலும் இவர்கள் ஒன்று சேர்கிறார்களா இல்லையா என்பது படம் வெளியான பிறகு தான் தெரிய வரும்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…