தமிழ் சினிமாவை சேர்ந்த சீரியல் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்வில் நடைபெறும் சிறிய சிறிய விஷயங்களை கூட தங்களது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். அதாவது திருமண முதல் குழந்தை பிறப்பு வரை அனைத்தையும் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதன்படி சமீபத்தில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பிரபல ஜோடிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நக்ஷத்ரா:
ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் விஷ்வா என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இதழ் என பெயர் வைத்துள்ளனர்.
கண்மணி:
சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் இதயத்தை திருடாதே என்ற டிவி சீரியலில் நடித்த நடிகர் நவீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் முடிந்த சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
காயத்ரி யுவராஜ்:
சின்னத்திரை சீரியல்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை காயத்ரி. அதே சமயம் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். அதன் பிறகு மீண்டும் தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை காயத்ரி அறிவித்திருந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
புகழ்:
விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் புகழ். இவர் தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தனது நீண்ட நாள் காதலியான பென்சி என்பவரை கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…