காலமெல்லாம் காதல் வாழ்க.. நயன்தாரா முதல் ஐஸ்வர்யா அர்ஜுன் வரை… காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்த பிரபலங்கள்.. வைரலாகும் போட்டோஸ்…

By Begam

Updated on:

காதலர் தினம் என்றாலே ஒரே கொண்டாட்டம் தான். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமணம் செய்து விட்டு காதலிப்பவர்களுக்கு சரி, இன்னும் திருமணம் ஆகாமல் காதலித்து கொண்டிருப்பவர்களும் சரி இந்த நாளை கொண்ட  மறப்பதில்லை. தற்பொழுது திரைபிரபலங்களின் காதலர் தின  கொண்டாட்டத்தை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

நயன்தாரா -விக்கி:

   

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.  இவர் தனது காதலரான இயக்குனர் விக்கியை திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளை வாடகைத்தாய் முறை மூலம் பெற்று கொண்டார். தற்பொழுது இவர் தனது கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

அட்லீ -பிரியா:

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. இவர் பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இயக்குனர் அட்லீ தனது மனைவி மற்றும் மகனுடன் காதலர் தினத்தை கொண்டாடிய வீடியோ இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Atlee Kumar (@atlee47)

சங்கீதா -ரெடின் கிங்ஸ்லி:

நடிகை சங்கீதா இவருக்கென சோசியல் மீடியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லியை திடீர் திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர் காதலர் தினத்தை தனது காதல் கணவருடன் கொண்டாடிய புகைப்படங்கள் இதோ…

கார்த்திகா நாயர்:

நடிகை ராதா நாயரின் மூத்த மகள் தான் நடிகை கார்த்திகா நாயர். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. தற்பொழுது இவர் தனது காதல் கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

கவின்:

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் கவின். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. தற்பொழுது இவர் தனது காதல் மனைவியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய வீடியோ இதோ…

நடிகை அபிராமி :

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் தற்பொழுது தனது கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய வீடியோவை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Abhirami (@abhiramiact)

ஐஸ்வர்யா அர்ஜுன்:

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள்தான் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன். இவருக்கும் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையாவிற்கும் சமீபத்தில் நிச்சயம் முடிந்தது. தற்பொழுது இவர்கள் இருவரும் இணைந்து தங்களது காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர்.

அமலாபால்-ஜெகத் தேசாய்:

நடிகை அமலா பால் தனது நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து 2 வது திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது கர்ப்பமாக இருக்கும் அவர் தனது கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

யாஷ்-ராதிகா பண்டிட்:

நடிகர் யாஷ் இவரை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. KGF படம் மூலம் உலக அளவில் பிரபலமான இவர் தற்பொழுது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார்.

ஆர்யா -சயீஷா:

நடிகர் ஆர்யா , நடிகை சயீஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் நடிகர் ஆர்யா தனது மனைவியுடன் காதலர் தினத்தை கொண்டாடிய புகைப்படங்கள் இதோ…