கனமழை அலெர்ட்! நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை..? வெளியான புதிய தகவல்..!!

By Soundarya on ஐப்பசி 16, 2025

Spread the love

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியிலே தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதன் காரணமாக  தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் இன்று தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு நாளைஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, கோவை, கடலூர், நாகை, சிவகங்கை உட்பட 18 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், கனமழையை முன்னிட்டு நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.