இனி இந்த வயதில்தான் 1 ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்… புதிய திட்டம் அமல்… பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!

By Nanthini on ஐப்பசி 30, 2025

Spread the love

டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல் 1 ஆம் வகுப்பில் சேர குழந்தைகளுக்கு ஆறு வயது பூர்த்தியாவது கட்டாயம் என்று டெல்லி கல்வி இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020க்கு இணங்க வயதுக்கு ஏற்ற விளையாட்டு அடிப்படையிலான கல்வியை வலியுறுத்தும் விதமாக இந்தக் கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டமைப்பின் கீழ் நர்சரி 3 -4 வயது, லோயர் கேஜி 4-5 வயது, அப்பர் கேஜி 5 -6 வயது மற்றும் ஒன்றாம் வகுப்பு 6 – 7 வயது என வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பு சில பள்ளிகளில் ஐந்து வயதிலேயே மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த கொள்கை மாணவர்களிடையே சமநிலையற்ற அறிவாற்றல் தயார் நிலைக்கு வழிவகுத்துள்ளது. தாமதமாக தொடங்குவது, குழந்தைகள் தங்கள் உளவியல் – சமூக மற்றும் மோட்டார் திறன்களை முழுமையாக வளர்த்துக் கொள்ள நேரமடிக்கும் என்று கல்வியாளர்களும் குழந்தை நல மருத்துவர்களும் கூறுகின்றன. டெல்லியில் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மற்ற மாநிலங்களிலும் இந்த மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது