தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை (நவ. 29) கடலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘டிட்வா’ புயல் எதிரொலியால் நாளை மயிலாடுதுறை, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு IMD ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த மாவட்டங்களுக்கும் விடுமுறை விடப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசித்து வருகின்றனர். முன்னதாக தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
