லீவு மேல லீவு..! மார்ச் மாதத்தில் இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையா..? குஷியில் பள்ளி மாணவர்கள்..!!

By Soundarya on மாசி 19, 2026

Spread the love

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வரவிருக்கும் மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தம் 11 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. பிப்ரவரி மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமே விடுமுறை நாட்களாக உள்ள நிலையில், மார்ச் மாதம் மாணவர்களுக்கு அதிக விடுமுறை நாட்களைக் கொண்ட மாதமாக அமையவுள்ளது.

இதில் வார இறுதி நாட்களான 8 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அடங்கும். அரசு பொது விடுமுறை நாட்களைப் பொறுத்தவரை, மார்ச் 3-ஆம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு, மார்ச் 21-ஆம் தேதி சனிக்கிழமை ரம்லான் பண்டிகை மற்றும் மார்ச் 31-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி ஆகிய மூன்று தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், தேர்வுக் காலத்திற்கு முன்னதாக மாணவர்களுக்குப் பாடங்களைப் படிக்கவும், ஓய்வெடுக்கவும் இந்த 11 நாட்கள் விடுமுறை பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.