கனமழை அலெர்ட்..! நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை.. வெளியானது அறிவிப்பு..!!

By Soundarya on மார்கழி 1, 2025

Spread the love

தமிழகத்தில் கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும் சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை இன்னும் விடவில்லை. அந்தவகையில் தொடர்ந்து கனமழை நீடிப்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சியில் நாளை  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரவு 10 மணி வரை ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தேனி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, நாகையிலும் மழை தொடரும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இதனால், அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.