தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டும் என்று அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களிடம் எதிர்மறையாக பேசக்கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கற்றலில் பின்தங்கி இருக்கும் மாணவர்களையும் வகுப்பில் சேட்டை செய்யும் மாணவர்களையும் அனைவரது முன்னிலையிலும் திட்டக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றலில் முன்னேற்றம் இல்லாதது குறித்து காரணம் கூறுவதை தவிர்த்து அவர்களை கற்றலில் முன்னேற்ற வாய்ப்பு காட்டுமாறு அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
